×

தென்மண்டலத்தில் கஞ்சா கடத்தல், விற்பனை தொடர்பாக 494 வழக்குகளில் 813 வங்கி கணக்குகள் முடக்கம்: ஐ.ஜி. அஸ்ரா கார்க் தகவல்

சென்னை: 10 மாவட்டங்களை கொண்ட தென்மண்டலத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக 813 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக 494 வழக்குகளில் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. 90 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நீதி விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகள் மற்றும் அவர்களின் நெருங்கிய உறவினர்களின் அசையும், அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டிருக்கிறது. அதன்படி விருதுநகர் - 76 கஞ்சா வழக்கில் 119 வங்கி கணக்குகளும், திண்டுக்கல்லில் 77 கஞ்சா வழக்கில் 116 வங்கி கணக்குகளும், தேனியில் 81 கஞ்சா வழக்குகளில் 146 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது.

இதேபோல் ராமநாதபுரத்தில் 28 வழக்குகளில் 56 வங்கி கணக்குகளும், சிவகங்கையில் 12 வழக்குகளில் 16 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டது. தொடர்ந்து நெல்லையில் 14 வழக்குகளில் 22 வங்கி கணக்குகளும், தென்காசியில் 11 வழக்குகளில் 20 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டிருக்கிறது. தூத்துக்குடியில் 22 வழக்குகளில் 36 வங்கி கணக்குகளும், குமரியில் 59 வழக்குகளில் 91 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். கஞ்சா கடத்தல், விற்பனைக்கு கைது நடவடிக்கை மட்டுமின்றி சில்லறை விற்பனையாளர்களின் வங்கி கணக்கும் முடக்கப்படும் எனவும் தென்மண்டல ஐ.ஜி. எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Tags : South Africa ,Asra , Southern Region, Cannabis Smuggling, 813 Bank Accounts, I.G. Azra Cork
× RELATED இந்தியா – தென் ஆப்ரிக்கா இடையே...